Delhi edges Mumbai to keep IPL playoff hopes alive while Samson powers Rajasthan to win

மும்பை என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரம் மற்றும் இந்திய…
மும்பை என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் நடைமுறைப்படியான நிதி மையமாகும். ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நகரமாக மும்பை உள்ளது மேலும் தோராயமாக 2 கோடி மக்கள்தொகை கொண்டதாக, உலகின் எட்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக உள்ளது. 2011-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்க மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பெருநகரமும்பையின் எல்லையில் வசித்த 1.25 கோடி மக்கள்தொகையுடன், இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக மும்பை இருந்தது. மும்பை மும்பை பெருநகரப் பகுதியின் மையமாக உள்ளது, 2.3 கோடி மக்கள்தொகை கொண்டு உலகின் ஆறாவது அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதியாக உள்ளது. மும்பை இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆழமான இயற்கை துறைமுகம் உள்ளது. 2008-ஆம் ஆண்டில், மும்பை ஆல்பா உலக நகரமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களையும் விட மும்பையில் அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களும், பில்லியனர்கள் உள்ளனர்.
  • நாடு: இந்தியா
  • மாநிலம்: மகாராட்டிரம்
  • கோட்டம்: கொங்கண்
  • மாவட்டம்: மும்பை மாநகரம் · மும்பை புறநகர்
  • முதலில் குடியேறியது: 1507
  • பெயர்ச்சூட்டு: மும்பா தேவி கோவில்
  • ஏற்றம்: 14 m (46 ft)
தரவை வழங்கியது: ta.wikipedia.org